செல்பி மீதான முகம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பிலிப்பைன்ஸ், கபோக் மாங்குரோவ் உயிரியல் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணி, அங்கிருந்த குளத்திற்குள் குதித்து முதலையுடன் செல்பி எடுக்க முயற்சிசெய்துள்ளார். அப்போது அந்த முதலை திடீரென அவரை தாக்கியுள்ளது.
தெய்வாதீனமாக அங்கிருந்த பாதுகாவலர்கள் முதலையிடம் இருந்து அவரை மீட்டனர்.
முதலை தாக்கியதில் இளைஞரின் கை, கால்கள், முதுகு மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டது. அவரது உடலில் மொத்தம் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..