15,May 2025 (Thu)
  
CH
சோதிடம்

இன்றைய ராசிபலன் (15.05.2025)

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்.


மேஷம்

வியாபாரத்தில் கடுமையாக உழைத்து நல்ல லாபம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அடைவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை நீக்குவீர்கள். சந்திராஷ்டமம். வீண் விவாதம் செய்யாதீர்கள்.


ரிஷபம்

எதிர்பார்த்த வங்கிக் கடனை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள்.


மிதுனம்

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் தூக்கத்தை தொலைப்பீர்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளவில்லை என்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள்.


கடகம்

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலில் உற்சாகமாக இறங்குவீர்கள். விவசாயிகள் அதிக வருமானம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்குவீர்கள். கடல் கடந்து தொழில் செய்வோர் இடையூறுகளை கடந்து வருவீர்கள். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.


சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்கினால் நஷ்டம் அடைவீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். தொழிலுக்காக கடன் வாங்குவீர்கள்.


கன்னி 

வாக்கு கொடுத்தவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளவில்லை என்றால் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள் .


துலாம்

பண வரவு அதிகமாகி சேமிப்பை உயர்த்துவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தால் பெருமிதம் கொள்வீர்கள்.


விருச்சிகம்

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மிகுந்த மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். உடல் பிரச்சினைக்காக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை அடைவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள்.


தனுசு

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த தானத்தை பிறருக்கு செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். வேலையாட்களின் உதவியால் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள்.


மகரம் 

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மனச்சங்கடப்படுவீர்கள். தொழில் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள்.


கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் புகழடைவீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலையில் சேருவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் அக்கறையோடு வேலை செய்து வருமானத்தை பெருக்குவீர்கள். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.


மீனம்

மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் மன வேதனைப்படுவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி அவதிப்படுவீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.



















இன்றைய ராசிபலன் (15.05.2025)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு