மேஷம்
கோபத்தின் காரணமாகக் கூட இருப்பவர்கள் பகையாகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
மேஷத்திற்கு இந்த வாரம் கெடுதல்கள் எதுவும் இல்லை. எல்லா விஷயத்திலும் நன்மைகள் மட்டும்தான். முயற்சி செய்தும் நடைபெறாத விஷயங்கள் இந்த வாரம் தெய்வத்தின் அருளால் சுலபமாக வெற்றி பெறும். உங்களில் பரணியில் பிறந்தவர்களுக்கு பிரச்னைகளில் இருந்து விடுதலை உண்டு. அஸ்வினிக்கு பிரச்னைகள் இழுத்தடிக்கும். பத்தில் சூரியன், சனியுடன் இணைந்திருப்பதால் தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். பணப் பற்றாக்குறையால் திணறுவீர்கள். அனைத்திலும் நிதானமாக இருப்பது நல்லது.
இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக நகர முடியாமல் இருந்த அனைத்து விஷயங்களும் தீர்வினை நோக்கிச் செல்லும். எதுவும் எல்லை மீறி போகாமல் பரம்பொருள் காப்பாற்றுவார். 26, 27 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ந் தேதி மாலை 5.47 முதல் 21-ந் தேதி இரவு 11.43 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
ரிஷபம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். புது முயற்சி கைகூடும்.
ஏழில் செவ்வாய் இருந்து உங்களுடைய செயல்திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும், ஒன்பதில் இருக்கும் புதன், பத்தாமிட சுக்கிரன் இருவரும் உங்களுக்கு நன்மைகளையே செய்வார்கள் என்பது நிச்சயம். பரம்பொருளின் கருணையினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். மேல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். சில ரிஷப ராசிக்காரர்களுக்கு கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பு தேடி வரும். வாரம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும்.
ரிஷபத்தினருக்கு இந்த வாரம் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடந்தாலும் போட்டி, பொறாமைக்காரர்கள் கவிழ்க்கப் பார்ப்பார்கள் என்பதால் நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய வாரம் இது. 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ந் தேதி இரவு 11.43 முதல் 24-ந் தேதி காலை 7.39 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
மிதுனம்
ஆதாயம் பாதிக்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும்.
மிதுனத்திற்கு வார ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப் பகுதியில் இருந்து நல்லபலன்கள் நடக்கத் துவங்கி தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் முன்னேற்றமாக இருக்கும். புதிதாக தொழில் ஆரம்பித்த இளைஞர்கள் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். ஏற்கனவே காலூன்றிவிட்ட நடுத்தர வயதினருக்கு இந்த பலன் பொருந்தாது.
இந்த வாரம் முதல் அஷ்டமச்சனி நடப்பதால் எதிலும் நேர்வழியிலேயே செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். சனி எப்போதும் ஆசை காட்டி மோசம் செய்வார். பேராசை பெருநஷ்டம் என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும். 24, 25 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ந் தேதி காலை 7.39 முதல் 26-ந் தேதி மாலை 5.39 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
கடகம்
பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிட்டும்.
எந்த ஒரு செயலைச் செய்தாலும் கடக ராசிக்காரார்கள் முன்யோசனையுடன் சிறப்பாக செய்பவர்கள் என்பதால் அதிர்ஷ்டம் கை கொடுத்து உங்கள் செயல் திறனை மேம்படுத்தும் வாரம் இது. கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் நல்லபலன்கள் உண்டு. வேற்று மதத்தினர் உதவுவார்கள். உங்களில் பூசம் நட்சத்தினருக்கு நல்ல வாரம் இது.
கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். குரு, செவ்வாய் வலுத்திருப்பதால் கையில் பண நடமாட்டம் இருக்கும். தந்தைவழியில் ஆதரவான விஷயங்களும் ஆதாயங்களும் உண்டு. நீங்கள் விரும்பிக் கேட்ட பொருளை அப்பா வாங்கி தருவார். மனம் உற்சாகமாக இருக்கும். இது உங்கள் வாரம்தான்.
சிம்மம்
கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
ராசிநாதன் சூரியன் ஆறில் மறைவதால் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு மனதை போட்டு குழப்பிக் கொண்டும் தவறாக ஏதேனும் நடந்து விடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டும் இருப்பீர்கள். கடவுளின் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு. எதுவும் எல்லை மீறாது. ஐந்தாமிட சனி விலகி விட்டபடியால் இனி உங்களால் எதிலும் சாதிக்க முடியும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். சொந்தத் தொழில் செய்ப வர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் வாரம்தான்.
தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படை வார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். மகம் நட் சத்திரக்காரர்களுக்கு ஒரு லாபம் உண்டு. மலைப் பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். வாரத்தின் பிற்பகுதி பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.
கன்னி
அடுத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றிதரும்.
எட்டுக்குடைய செவ்வாய்மூன்றில் ஆட்சி வலுப் பெற்று, யோகாதிபதி சனி ஐந்திற்கு மாறுவதால் இந்த வாரம் கன்னி ராசிக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் லாபங்கள் இருக்கும். எதிர்பாராத பணவரவும் இருக்கும். அதே நேரம் இளைய பருவத்தினருக்கு வயதுக்கேற்ற விஷயங்களில் எதிர்பார்ப்புகள் எதிர்மறையாக இருக்கும் என்பதால் முன்னேற்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையின்றி ஒருவரை பகைத்து கொள்ள வேண்டாம். நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
குரு, கேது இணைவால் உங்களில் சிலருக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் இப்போது கிடைக்கும். எதிரிகள் கை ஓங்கியிருக்கும் வாரம் இது. எனவே எதிர்ப்புகளின் மேல் ஒரு கண் வையுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும்.
துலாம்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்யோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
ராசிநாதன் சுக்கிரனின் ஐந்தாமிட இருப்பும், அவருக்கு செவ்வாயின் பார்வையும் துலாமுக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால், இந்த வாரம் நீங்கள் சகோதர, சகோதரிகளின் மூலமும், வாழ்க்கைத் துணை வழியிலும் லாபங்களை அடையும் வாரமாக இருக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியடையும் என்பதால் தயக்கமின்றி செயல்பட வேண்டிய வாரம் இது. கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிகப்பு நிற பொருட்கள் சம்மந்தப்பட வியாபாரிகள் இலாபம் அடைவார்கள். அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியான முடிவு வந்து நிம்மதி வரும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.
விருச்சகம்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
ராசிநாதன் செவ்வாய் இன்னும் சில வாரங்களுக்கு ராசியிலேயே ஆட்சி பெற்ற அமைப்பில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தடைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் வாரம் இது. இதுவரை முயற்சி அளவிலேயே இருந்து வந்த சில காரியங்கள் இப்போது நீங்கள் நினைக்கும் விதத்தில் நிறைவேறும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி இப்போது நட்பு பாராட்டுவார்கள்.
சனி முழுவதுமாக விலகி விட்டதால் தடை பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பளஉயர்வு இனிமேல் உண்டு. பொருத்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நல்ல வேலை கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். தொழில் துறையினருக்கு அனைத்துப் பிரச்சினை களும் விலகி நிம்மதி இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் உண்டு. இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்தவர்கள் இனி மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். வாங்கல் கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
ராசிநாதன் குரு ஆட்சி வலுப் பெறுவதால் உங்களின் மனிதநேயம் அருகில் உள்ளவர்களுக்கு தெரியும் விதமாக ஒரு நற்செயல் செய்வீர்கள். நண்பர்களில் ஒருவர் விலகிப் போவார். எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் செய்வதன் மூலம் எதையும் சமாளிப்பீர்கள். கோட்சார நிலையில் தனுசுக்கு குறைகள் சொல்ல முடியாத, சொல்லக்கூடாத வாரம் இது. என்ன இருந்தாலும் கோட்சாரம் என்பது பொதுப்பலன்தான் என்ப தால் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகள் சரியில்லை என்றால் கஷ்டப்படுவீர்கள்.
இதுவரை பணப் பிரச்சினையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் ஆரம்பிக்கும். லட்சியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் அதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்குவீர்கள். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். எந்தக் காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கெளரவம் நல்லபடியாக இருக்கும்.
மகரம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவார்கள். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
ராசிநாதன் சனி ராசியில் அமர்ந்து ஆட்சி வலுவுடன் இருப்பதால் உங்களுடைய தைரியமும், செயல்திறனும், சாமர்த்தியமான நடவடிக்கைகளும் சிறப்பாக வெளிப்படும் வாரம் இது. குறிப்பிட்ட சில மகரத்தினர் ஏதேனும் ஒரு செயலால் நற்பெயரும், புகழும் அடைவீர்கள். இரண்டாமிடத்தை பாபத்துவ செவ்வாய் வலுப்பெற்றுப் பார்ப்பதால் திடீரென சுடுசொல் சொல்வீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
இதுவரை சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். எதற்கெடுத்தாலும் உங்களை எதிர்த்து வந்தவர்கள் இப்போது திடீரென மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிப்பார்கள். நடப்பது கனவா நனவா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் கடும்முயற்சிக்கு பின்பே வெற்றி தரும். ஆனால் ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும்.
கும்பம்
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணத் தடை அகலும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
கும்பாதிபதி சனி விரையத்தில் இருந்தாலும், குரு லாபத்தில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. உங்களில் கருத்து வேற்றுமை யாலும் வேலை விஷயங்களாலும் பிரிந்து கிடந்த குடும்பத்தினர் ஒன்று சேரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் ஒன்றுக்கு இரண்டாக லாபங்களைச் சம்பாதிப்பீர்கள். முட்டுக்கட்டைகள் விலகும் பொருளாதார விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தவர்கள் அவை நீங்கி நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வேலை, தொழில் இடங்களில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக் கப்படுதலும் நடக்கும். இளைஞர்கள் சிலருக்கு பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களை தவிருங்கள். பெண்கள் விஷயத்தில் கடன் வாங்க நேரிடலாம். குறிப்பாக சிலர் அக்கா தங்கைகளின் சுபகாரியத்திற்கு கடன் வாங்குவீர்கள்.
மீனம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். புதியவர்களை நம்பிச் செய்த காரியம் அதிருப்தி தரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
இதுவரை பத்தாம் வீட்டில் இருந்து உங்களின் பணவரவுகளை தடுத்துக் கொண்டிருந்த சனி விலகும் வாரம் இது. செய்த வேலைக்கேற்ற கூலியும், வருமானமும் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் இனிமேல் நிரந்தரமான நல்ல வருமானம் என்ற அமைப்பை அனுபவிப்பீர்கள். குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்களுக்கு இது மறக்க முடியாத வாரமாகவும், நீண்ட காலமாக நடக்காமல் இருந்த விஷயங்கள் நடக்கின்ற வாரமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
யோகாதிபதி செவ்வாய் இன்னும் சில வாரங்களுக்கு ஆட்சி நிலையில் இருக்கப் போவதால் கவலைகள் அனைத்தும் விலகி ஆனந்தம் வரப் போகிறது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சில இளையவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை இன்னாரென்று தெரியாமலேயே இப்போது சந்திப்பீர்கள். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு.
0 Comments
No Comments Here ..