15,May 2025 (Thu)
  
CH
விளையாட்டு

ICC தரவரிசையில் முதலிடம் பிடித்த ரவிந்திர ஜடேஜா

ஐ.சி.சி., தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் உள்ள இந்தியாவின் ஜடேஜா சாதனை.


டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியல் வெளியானது. 'ஆல்-ரவுண்டர்' பிரிவில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் ஜடேஜா. இதுவரை 1151 நாட்கள் முதலிடத்தில் தொடர்கிறார்.


கடந்த 2022, மார்ச் மாதம் வெளியான தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டரிடம் இருந்து முதலிடத்தை கைப்பற்றினார் ஜடேஜா. இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இந்தியாவின் கபில்தேவ் சாதனைகளை முறியடித்தார். கடந்த சீசனில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய (527 ரன், 48 விக்கெட்) ஜடேஜா, ஐ.சி.சி., சார்பில் வெளியான கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார்.




ICC தரவரிசையில் முதலிடம் பிடித்த ரவிந்திர ஜடேஜா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு