சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் தலைமையில் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஜயனி வெகடபொல மற்றும் அரசாங்க சட்டத்தரணி சக்தி ஜாகொடஆராச்சி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
படலந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்த உண்மைகளை இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது. கூடுதலாக, காலக்கெடு விதிக்கப்பட்ட குற்றங்களை அடையாளம் காண்பதும் குழுவின் பொறுப்பு என்று கூறப்படுகிறது.
படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி செயலகத்தால் சமீபத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது.













0 Comments
No Comments Here ..