01,Jul 2025 (Tue)
  
CH

மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை - ஹர்ஷ டி சில்வா

ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கு மின்சார கட்டணத்தை 18 சதவீதத்தினால் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


தனது எக்ஸ் தள பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், 9 சதவீதமாக அதனைப் பராமரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலொன்றை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


2009 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சட்டம் மற்றும் 1969 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட சூத்திரத்தை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.




மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை - ஹர்ஷ டி சில்வா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு