ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கும், பின்னர் சீனாவிற்கும், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் விஜயம் செய்தார்.
இந்த ஜேர்மனி பயணம் ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..