பாடசாலைகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பது அவசியம்.
இதற்கமைய சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டும்.
இன்றைய தினம் (23.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஆசிரியர்களுக்கு குறித்த மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..