ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 988,669 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 188,694 ஆகும்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 109,840 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 93,248 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 67,381 சுற்றுலாப் பயணிகளும்,பிரான்ஸிலிருந்து 55,587 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 54,223 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 42,301 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.













0 Comments
No Comments Here ..