இலங்கையில் இந்த ஆண்டு மே 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நடைபெற்ற 1,003 வீதி விபத்துக்களால் 1,062 பேர் பலியாகியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, 2,064 படுகாயங்களை ஏற்படுத்திய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் சுமார் 7,000 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..