15,Jun 2026 (Mon)
  
CH

ஐபேடில் வாட்ஸ் அப் செயலி அறிமுகம்: பயனர்கள் மகிழ்ச்சி!

உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதிதாக கொண்டுவரும் வசதிகளால் பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. ஆனால், இவ்வளவு அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. அதாவது, வாட்ஸ் அப் ஆனது முதன்மையாக iPhone மற்றும் Android மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டது. iPad-க்கு தனியாக உகந்த (optimized) பதிப்பு இல்லாததால், வாட்ஸ் அப் செயலி அதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது.App Store-ல் கிடைக்கும் WhatsApp ஆனது iPhone பதிப்பாகவே இயங்கும். இதனால் iPad-ன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. மாறாக, வாட்ஸ் அப் வெப் மூலமாகவே iPad-ல் பயனாளர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வந்தனர்.


மேலும், WhatsApp iPad-க்கு தனியாக உகந்த பதிப்பை வெளியிடுவது குறித்து Meta ஆலோசித்து வந்தது.இந்த நிலையில், iPad-லும் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை iPad-ல் website சென்றே வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி மொபைலில் இருப்பதை போல ஆடியோ, வீடியோ கால்கள் செய்யலாம்.நீண்ட காலமாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




ஐபேடில் வாட்ஸ் அப் செயலி அறிமுகம்: பயனர்கள் மகிழ்ச்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு