19,Jun 2026 (Fri)
  
CH

நாளையுடன் நிறைவுக்கு வரும் 24மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.


கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 2025.02.18ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த நிலையில், நாளையுடன் (30) நிறைவுக்கு வரவுள்ளது.


அதற்கமைய, 2025 ஜூன் 02ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.


தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


பிராந்திய அலுவலகங்களில் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாளையுடன் நிறைவுக்கு வரும் 24மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு