அரச பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்யும் சுற்று நிருபத்தை மீளவும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு அரசியல்வாதிகள் பங்கேற்பதனால் பெற்றோருக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சிறிது காலத்திலேயே அளித்த வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.













0 Comments
No Comments Here ..