10,Mar 2026 (Tue)
  
CH

நிதி சிக்கனம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை வலியுறுத்தும் ஜனாதிபதி

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இயன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, வரி செலுத்தும் அனைவரினதும் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.


பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரி இது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


மக்களுக்கு வினைத்திறனான பொது சேவைகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அரச இயந்திரத்திற்குள் காணப்படும் கருப்பு பொறிமுறையை உடைத்து அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வகையில் ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




நிதி சிக்கனம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை வலியுறுத்தும் ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு