23,Aug 2025 (Sat)
  
CH

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை ஜப்பான் பதிவு செய்தது

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வருடாந்திர பிறப்பு விதத்தைப் ஜப்பான் 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது. 


கடந்த ஆண்டு ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை 686,061 ஆக இருந்ததாகவும், இது 1899 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் மிகக் குறைந்த வருடாந்திர பிறப்பு எண்ணிக்கை என்றும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 


2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் பிறப்புகளின் எண்ணிக்கை 5.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமீப ஆண்டுகளில், ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இந்த நிலைமையை ஜப்பானிய பிரதமர் 'அமைதியான அவசரநிலை' என்று விவரித்துள்ளார். 


இந்த சூழ்நிலையில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும், வயோதிப மக்களின் அதிகரிப்பால், ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.




கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை ஜப்பான் பதிவு செய்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு