24,Aug 2025 (Sun)
  
CH

அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வரும் விவகாரம் - தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர்மை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படும் என்ற காரணத்தால் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இந்த பதிலை அளித்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அஸாத் மௌலான சனல் -04 அலைவரிசைக்கு 2023.09.09 ஆம் திகதியன்று அறிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இந்த அறிக்கையால் சமூகத்தில் பாரிய கருத்தாடல் தோற்றம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.


குறித்த விடயம் தொடர்பில் சமூக மற்றும் சமாதான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அஸாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வந்து, அடுத்தக்கட்ட நடவடிகைகளை மேற்கொள்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த செயன்முறைக்கு தடை ஏற்படும் என்ற காரணத்தால் தற்போது அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது.” என தெரிவித்தார்.


"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது."




அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வரும் விவகாரம் - தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சு அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு