தெஹிவளையில் ரயிலில் மோதி தம்பதியினர் நேற்று (05.06) உயிரிழந்துள்ளனர்.
ரயில் பாதையை கடக்கும் போது கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதான தம்பதியினரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..