இலங்கையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்கும் செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுமென செய்தி தொடர்பாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பான பொது ஆலோசனை கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..