அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேசியப் பாதுகாப்பு பிரிவினர் போராட்டங்களை தடுப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் 101 முக்கிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, கலிபோர்னியாவின் ஆளுநர், துருப்புக்களின் அனுப்புதலை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளார்.













0 Comments
No Comments Here ..