09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று (08) ஒரே நாளில் 89 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.


சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25 - க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.


குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹானில் இந்த வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.


இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் நேற்று (08) ஒரே நாளில் மட்டும் 89 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 813 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் மேலும் 36,690 பேரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


கடந்த 2002 - 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு