19,Jun 2026 (Fri)
  
CH

தமிழ் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிரான இனவெறி விமர்சனங்கள்..

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனவெறி விமர்சனத் தாக்குதல்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


மேலும் இதுபோன்ற தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கனேடிய தமிழ் கூட்டு, கனேடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் மீதான இனவெறி விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.


இந்த விமர்சனங்கள், அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் கனேடியர்கள் மீது தவறான மற்றும் நியாயமற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.


கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஆனந்தசங்கரி, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.


எனினும், இந்த முடிவு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று கனேடிய அமைச்சர் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில் அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு எதிரான இந்த கருத்துக்கள், தமிழ் கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், கனடாவின் சமத்துவத்துவத்தையும் பாதிப்படையச் செய்யும் என்று தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.




தமிழ் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிரான இனவெறி விமர்சனங்கள்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு