23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

புதிய கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி" யின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.

ஆயினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணி , ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே இன்று (09) இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.





புதிய கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு