20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மக்கள் கையிலே கல்குடா அரசியல் இருப்பு

எதிர்வரும் தேர்தலில் கல்குடா சமூகம் ஒற்றுமைப்பட்டு எடுக்கின்ற தீர்மானத்தில் தான் அரசியல் இருப்பு தங்கி இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 48 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி மைதானத்தில் இன்று (09) இடம்பெற்ற போது கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் படிக்குமாறு சொல்வது போன்று எதிர்காலத்தில் விளையாடு என்றும் சொல்ல வேண்டும். எமது மாணவ சமூகத்தினை சிறப்பாக செயற்பட வேண்டுமாக இருந்தால் எதிர்காலத்தில் போதையற்ற சமுகத்தினை எமது பிரதேசத்தில் மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் எமது பிள்ளைகள் விளையாட்டு துறையில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

எமது பிள்ளைகளை எதிர்காலத்தில் புத்தக கல்வியில் மாத்திரம் தலைவர்களாக கொண்டுவர முடியாது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட்டிலும் ஈடுபடுத்த முன்வர வேண்டும். பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு, மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையாதமையினால் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கல்குடா சமூகம் எடுக்கின்ற முயற்சி, எதிர்வரும் மாதத்தில் இருந்து செயற்பட போகும் முறைமை, கல்குடாவின் ஒற்றுமை, இதற்கு கட்டியம் கூறும் என்று நினைக்கின்றேன். எல்லோரும் ஒற்றுமைப்பட்டு எடுக்கின்ற தீர்மானத்தில் தான் அரசியல் இருப்பு தங்கி இருக்கின்றது.

கல்குடாவின் அரசியல் இருப்பிலே தான் எமது பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திகள் போன்ற வேலைத் திட்டங்கள் இறைவன் துணையோடு மேற்கொள்ள உள்ளோம் என்ற நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல வேண்டும்.

எனவே எமது கல்குடா பிரதேசத்திற்கு ஆளுமை மிக்க தலைவர்களை கொடுக்க வேண்டி உள்ளது. ஆகவே பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் கூடிய ஆலோசனை வழங்கி ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.





மக்கள் கையிலே கல்குடா அரசியல் இருப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு