யாழ்ப்பாணம்,இருபாலை - மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வன்முறை கும்பலினால் கொடூரமாக வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
இந்த சம்பவத்தில் பலியானவர் இருபாலை - மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தோடு, வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..