இலங்கையில் யாசகம் பொறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற விதத்தில் பொருட்களை விற்பனை செய்யும் சிறுவர்களை கொண்டையும் வேலைத்திட்டம் நாட்டின் பல பக்கங்களில் கடந்த தினங்களாக நடைபெற்ற நிலையில் 21 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இணைத்து கொழும்பு, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர் கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அனுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விற்பனை நிலையங்கள், மற்றும் சமிக்ஞை விளக்குகள் உள்ள பகுதிகள் குறிவைக்கப்பட்டன.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, யாசகம் பெற்றும், பொருட்களை விற்றும் பாதுகாப்பற்ற முறையில் நடமாடிய 21 சிறுவர்கள் மீட்கப்பட்டு, அவர்களைப் பொறுப்பேற்று தகுதியான பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்
0 Comments
No Comments Here ..