யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் கடை ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 4, 2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..