வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து தனிப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் போனவர்களின் தொடர்ச்சியான நடைமுறை பற்றிய தகவல்களை இந்த குழுவில் உள்ள 5 நிபுணர்கள் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை உட்பட 32 நாடுகளில் உள்ள வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான 530 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.நா.சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு இம்மாதம் 10 முதல் 14 வரை ஜெனீவாவில் தனது 120 ஆவது அமர்வை நடத்துகின்றது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது...
வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட தடைகள், சட்டம் மற்றும் நடைமுறைகள் அல்லது வலிந்து காணாமல் போன வழக்குகளைத் தீர்ப்பதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து நிபுணர்கள் ஆராய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த செயற்குழு, தனது 40 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை அடுத்து அன்றைய தினமே பகல் 1 மணிக்கு விசேட செய்தியாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இடம்பெறும் செயற்குழுவின் மீதமுள்ள அமர்வு தனிப்பட்ட முறையில் நடைபெறுகின்றது.
மேலும் இந்த செயற்குழுவில் அர்ஜென்டினா, கொரியா, மொராக்கோ, லிதுவேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த ஐந்து சுயாதீன நிபுணர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இலங்கைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
0 Comments
No Comments Here ..