கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிண்ணியா, அஹமட்லேன் வீதியில் உள்ள குடும்பஸ்தர் (வயது 58) ஒருவரிடமிருந்தே இவ்வாறு 400 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை உரிய சிகரெட்டுகளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..