ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முதல்நிலை அதிகாரிகளை தமது குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்தின் அரச நிறுவனங்கள் தொடர்பான கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.
2020 பெப்ரவரி 19ம் திகதி தமது குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
எயார்பஸ் கையூட்டல் தொடர்பான முறைக்கேடு தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் உட்பட்ட ஸ்ரீலங்கன எயார்லைன்ஸ் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து பின்னர் விசாரணைகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்,எயார்பஸ் நிறுவனங்களுக்கு இடையிலான கையூட்டல் விடயம் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் விவாதமொன்றும் நடத்தப்படவுள்ளது.
0 Comments
No Comments Here ..