19,Mar 2026 (Thu)
  
CH

கொஸ்கமவில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!

இன்று (06) அதிகாலை கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.


முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் அவர்களை தாக்கினர்.


இந்தச் சம்பவத்தில், அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணியும், அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கொஸ்கமவில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு