உயர் பாதுகாப்பு வலயங்களால் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை குறித்தும், போர் முடிந்து 16 வருடங்கள் ஆகியும் இந்த வலயங்கள் அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் நிலங்கள் நீண்டகாலமாக இந்த உயர் பாதுகாப்பு வலயத்தின் போர்வையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.
யாழ் குடாநாட்டின் 30% நிலப்பரப்பு அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சமாதான முயற்சிகளின் போது, நம்பியார் என்ற இந்திய இராணுவ அதிகாரியின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல் திறன் இருக்கும் வரை உயர் பாதுகாப்பு வலயங்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டது. புலிகள் இல்லாமலானால் அல்லது ஆட்டிலறி அச்சுறுத்தல் நீங்கினால் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போர் முடிந்து 16 வருடங்கள் ஆகியும், அந்த அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இதனால், சாதாரண தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..