செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் அனைவருக்கும் திருப்தியளிக்கும் வகையில் நீதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தினகரன் நாளிதழுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
செம்மணி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசாங்கம் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் சுனில் வட்டவல குறிப்பிட்டார்.
இந்த விவகாரங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிடாது என்றார். அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது தெரியாததால், எவரது அவசரத்திற்கும் ஏற்ப செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார். கடந்த அரசாங்கம் அவ்வாறு செயல்பட்டாலும், தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செம்மணி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பினரும் திருப்தியடையும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எம்.பி. பிள்ளையானுக்கு பிணை வழங்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் அந்த பிரேரணையை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்ததாகவும், செம்மணி புதைகுழியையும் அதனுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய "மோசமான அரசியலை" கைவிட வேண்டும் என்றும், மக்களின் சடலங்கள் மீது தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த அரசாங்கம் குற்றச்செயல்களில் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார். சட்டங்கள் புத்தகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அதன்படி பொலிஸ் மா அதிபரையும் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் சுனில் வட்டவல மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..