கொழும்பில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 8 வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுவோருக்கான வீடமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக உத்தேசிக்கப்பட்டிருந்த 2 வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக வீடற்ற அல்லது போதிய வசதியற்ற வீடுகளில் வாழும் குடும்பங்களுக்குப் பெரும் நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, நடுத்தர வருமானம் ஈட்டுவோரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்ட 6 திட்டங்களும் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இதில், பேலியகொடை பகுதியில் உள்ள 2 தொடர்மாடி குடியிருப்பு திட்டங்கள், ஒருகொடவத்தை பகுதியில் உள்ள 2 வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ஸ்டேடியம் கம் வீடமைப்பு திட்டம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக புதிய முதலீட்டாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படுவது, கொழும்பு நகரில் வீடமைப்புத் தட்டுப்பாட்டை நீக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..