07,Feb 2026 (Sat)
  
CH
BREAKINGNEWS

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு!

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகளே பதிவாகின. வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எனவே அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.


ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு