யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (ஜூலை 23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பிரதான வளாகத்தில், கறுப்பு ஜூலை நினைவுருவப் படத்திற்கு மாணவர்கள் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தினர்.
1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இதன்போது இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.













0 Comments
No Comments Here ..