02,May 2024 (Thu)
  
CH
கனடா

விண்ட்சரில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

விண்ட்சரில் உள்ளூர் உற்பத்தி வேலை சந்தையில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ட்சருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே, மத்திய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலானி ஜோலி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

விண்ட்சரில், லாவல் டூல் ரூ மோல்ட் லிமிடெட், துல்லிய ஸ்டாம்பிங் குழு மற்றும் எஸ்பிஎம் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் 42 புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உபகரணங்களை வாங்குவதற்கும், நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் சுமார் 7 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது. அத்துடன் புதிய இயந்திரங்களை இயக்கக்கூடிய புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளது.

நாடு முழுவதும் மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை கொண்டுள்ள விண்ட்சருக்கு, இந்த அறிவிப்பானது சற்று ஆறுதல் அளித்துள்ளது. கனடாவின் கூற்றுப்படி, நகரத்தின் ஜனவரி வேலையின்மை விகிதம் 8.3 சதவீதத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





விண்ட்சரில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு