15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

பிரபல தமிழ் பின்னணிப் பாடகி காலமானார்!

தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார். கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். 

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் தனது 69 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

இவரது மறைவுக்கு திரை பிரபலகங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 

மேலும், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், திருப்பாச்சி என 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். உமா ரமணனின் கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். சன் டிவியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். சென்னை அடையாறில் தனது கணவர் ரமணனுடன் வசித்து வந்தார். 

கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். 


இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா ரமணைன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




பிரபல தமிழ் பின்னணிப் பாடகி காலமானார்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு