26,Apr 2024 (Fri)
  
CH
ஜரோப்பா

பரிஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 30ஆம் மற்றும் 31ஆம் ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பரிஸில் 3,552 பேர் வீடுகள் இல்லாமல் வீதிகளில் படுத்துறங்குவதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தினை விடவும் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இந்த எண்ணிக்கை 3,641ஆக இருந்துள்ளது.

இந்த வீடற்றவர்களில் 2,629 பேர் பரிஸ் 19ஆம் வட்டாரத்தில் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர 10ஆம் மற்றும் 18ஆம் வட்டாரத்தில் மிக குறைந்த அளவு வீடற்றவர்கள் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 2,000 தொண்டு ஊழியர்கள் பணிபுரிந்துள்ளதாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.





பரிஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு