நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இதேவேளை, பாடசாலைகளின் முதலாம் தவணையின் 3 ஆம் கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும்.
மேலும், சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31 ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 30,527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை க.பொ.த சாகதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளது.
0 Comments
No Comments Here ..