13,May 2024 (Mon)
  
CH
சினிமா

எல்லா சானல்களிலும் இரவு ஒன்பது மணி சீரியல்களுக்குள் போட்டி போட வச்ச செம்பருத்தி… அழுகய தவிற வேற என்ன இருக்கு அதுல

ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சீரியல் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சன் டிவியின் பிரைமரி டைம் என்று சொல்லக்கூடிய 9:30 மணி நேரத்தை 9 மணி என்று மாற்றி யோசிக்க வைத்த சீரியல் செம்பருத்தி. இதில் பார்வதியாக நடிச்சு இருக்கும் ஷபானா ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

ஆதியாக நடிக்கும் கார்த்திக்குக்கு ஏற்கனவே பெண் ரசிகைகள் அதிகம்,. இந்த சீரியல் மூலம் இன்னும் இன்னும் என்று ரசிகைகள் பெருகினார்கள். இதனால் ஜீ தமிழ் டிவியில் செம்பருத்தி சீரியல் பார்க்கும் சீரியல் ஆர்வலர்கள் பெருகினர்.

அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாமல் போனது என்பது உண்மைதான். இந்த நேரத்தில்தான் சன் டிவிக்கு 9 மணி நேரம் என்பது சவாலாகிப் போனது. ராசாத்தி சீரியல் 

குடும்ப பெண்களுக்கு பிடித்த திருமதி செல்வம் ஹீரோ நடிகர் சஞ்சீவ் நடிப்பில் உருவாகும் கண்மணி சீரியலுக்கு நேரம் என்று 8:30 மணி நேர ஸ்லாட் டைம்…. அதன் தொடர்ச்சியான சன் டிவி முன் கட்டிப்போடும் நேரமாக 9 மணி நேரத்தை வேல்யூ ஸ்லாட்டாக்கி விஜயகுமார் ஸ்டார் காஸ்ட்டில் ராசாத்தி சீரியலுக்கு ஒதுக்கியது.


ராசாத்தி நினைத்த அளவுக்கு ஹிட் சீரியலாக இல்லை. விஜயகுமாரும் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் அளவுக்கு பெரிய பட்ஜெட் சீரியலும் இல்லை. என்றாலும் செம்பருத்தி சீரியலுக்கு போட்டி தர ராசாத்தி உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து தேவயானியை களம் இறக்கியது ராசாத்தி சீரியல் குழு.

அடுத்து ஹீரோயினையும் மாற்றி நல்ல ஃபிகர் என்று ரசிக்கும் அளவுக்கு ஒரு பெங்காலி பெண்ணை நடிக்க வைத்து வருகிறது சீரியல் குழு. அடுத்து மக்களை முழுவதுமாக திசை திருப்பி சன் டிவி வசம் கட்டிப்போட சித்தி 2 என்று செம்பருத்தி சீரியலுக்கு போட்டியாக இப்போது பார்க்கப்படுவது சித்தி 2 சீரியல்தான். அழகை ஆராதிக்க 

நினைத்த படி சித்தி 2 வசம் சீரியல் ஆர்வலர்களை சன் டிவி கட்டிப்போட்டு வைத்தாலும், செம்பருத்தி சீரியலுக்கான பார்வையாளர்கள் அந்த சீரியலை பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள்.காரணம் என்று பார்த்தால் செம்பருத்தி சீரியலின் நாயகி, நாயகன்தான்.

ஆதிக்கான பெண் ரசிகைகளையும், பார்வதிக்கான ஆண் ரசிகர்களையும் இழுக்கும் அளவுக்கு சித்தி 2 சீரியலில் காந்த கண்ணழகி என்று ஈர்க்கும் ஃபிகர்கள் இல்லை என்பது ரசிக்கும் மக்களில் ஒரு சாராரின் கருத்து.

இரவு நேரத்தில் பார்த்து ரசித்து மகிழும் அளவுக்கு சித்தி 2 சீரியலில் அழகிகள் இல்லை என்றும், பார்த்த முகத்தையே பார்க்க வைக்கும் அளவுக்கு சித்தி 2 சீரியலின் நடிகர் நடிகைகள் இல்லை என்பது இவர்களின் மனக்குறை.

அழகை அழகு என்று சொல்லி ரசிப்பதில் ஒன்றும் தவறில்லைதானே.. அவர்கள் விரும்பும் அழகு, அவர்கள் ரசிக்கும்படியான நடிகைகளை நடிக்க வைப்பது என்பது சினிமா எடுப்பவர்கள் தலையாய கடமையாக இருப்பது போலவே சீரியல் எடுப்பவர்களுக்கும் இந்த கடமை உள்ளது.

முதலில் டிவி முன்னால் உட்கார வைக்க இது மாதிரி ஈர்ப்புக்கள் அவசியமாகத்தான் இருக்கிறது. இதை இல்லை என்று யாராலும் வரிந்துக்கட்டிக்கொண்டு வர முடியாது.




எல்லா சானல்களிலும் இரவு ஒன்பது மணி சீரியல்களுக்குள் போட்டி போட வச்ச செம்பருத்தி… அழுகய தவிற வேற என்ன இருக்கு அதுல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு