பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள விதம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளுக்கு இடையேயான நிலைப்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவும், தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..