13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக கச்சதீவு ஆலய பங்குத்தந்தை எமில் போல் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனயார் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து எமது கெப்பிட்டல் செய்திப்பிரிவு வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவிற்கு வருகை தருவதற்காக இந்தியாவிலிருந்து 77 விசைப்படகுகள் மற்றும் 25 நாட்டுப்படகுகளில் 3,004 பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தமது ஆதார் அடையாள அட்டையையும், காவல் நிலையங்களில் பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழையும் கட்டாயமாக உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு, இலங்கையில் கொரோனா தொற்று இல்லை என தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய திருப் பயணிகள் குழு சார்பாக தமிழக சுகாதாரத்ததுறை செயலாளர் பீலா ராஜேஷிடம் வினவிய போது, இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு