19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

புதிய தமிழர் ஐக்கிய கூட்டணி வடக்கு- கிழக்கு தேர்தலில் போட்டியிடும்- கருணா

கிழக்கில் புதிதாக உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு- கிழக்கில் போட்டியிடுமென முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்

எனவே இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள விருப்பமானவர்கள் இணைந்து கொள்ளலாமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார்

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கின்றோம். தமிழர் ஜக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இதில் பல கட்சிகள் இணைவதற்கு முன்வந்துள்ளன. அதனடிப்படையில் கட்சியின் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் திடமாக தீர்மானித்துள்ளோம். அதாவது சூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

வடக்கு- கிழக்கில் பாரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுவந்த தவறுகளை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஆகவே அவர்களுக்கு என்ற ஒரு மாற்று சக்தி தேவைப்படுகின்றது. எனவே இந்த சக்தியை இணைப்பதற்காக, நாங்கள் வெளிப்படை தன்மையுடன் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களுடைய வாக்குகள் சிதறிச் செல்லாமல் இருக்க நாங்கள் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம். இதனடிப்படையில் கிழக்கு தமிழர் ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம்

அரசியலில் இருப்பவர்கள் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக தேவைகள் ஏற்படும்போது சில சில விட்டுக் கொடுப்புக்களை செய்யவேண்டும். மக்களின் நலன்கருதி செயற்படும் அரசியல் கட்சிகள் தமது வரட்டு கௌரங்களை வீசி எறிந்துவிட்டு வந்து இணைந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுடன் கிழக்கு தமிழர் ஒன்றியத்தை அனுப்பி பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அவர்களும் வருவதாக கூறியிருந்தனர்.

ஜக்கிய தேசிய கட்சி இன்று யானை சின்னத்தை வீசி எறிந்துவிட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளது. அதேபோன்றுதான் இன்று சிறிலங்கா சுதந்திர கட்சியும் அந்த விட்டுக் கொடுப்பை செய்து மொட்டு சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர்.

ஏன் என்றால் சில சந்தர்ப்பம் வருகின்றபோது மக்களுக்காக சில விட்டுக் கொடுப்புடனும் சில நெகிழ்வுத் தன்மையுடனும் எமது தமிழ் தலைவர்கள் இருக்கு வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” என குறிப்பிட்டுள்ளார்.





புதிய தமிழர் ஐக்கிய கூட்டணி வடக்கு- கிழக்கு தேர்தலில் போட்டியிடும்- கருணா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு