18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

தென்கொரியாவில் உள்ள எந்தவொரு இலங்கையரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை!

தென்கொரியாவில் உள்ள எந்தவொரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியாவிற்கான இலங்கை தூதரகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக பரவி வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசியமான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய குறித்த தொலைபேசி இலக்கத்தை இன்றைய தினத்திற்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 77 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





தென்கொரியாவில் உள்ள எந்தவொரு இலங்கையரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு