10,May 2024 (Fri)
  
CH
சினிமா

ரஜனியின் 168 வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது திரைபடத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயந்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. 

கிராமத்து பின்னணியில் தயாராகிவரும் இந்த திரைப்படத்திற்கு படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை தலைவர் 168 அழைத்து வந்த இந்த திரைப்படத்திற்கு தற்போது அண்ணாத்த என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தின் டைட்டில் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இமான் இசையுடன் வரும் இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.





ரஜனியின் 168 வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு