21,Nov 2024 (Thu)
  
CH
தொழில்நுட்பம்

பெண்களுக்கான 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட அடிடாஸ் ஷூ அறிமுகம்..

சிம்பிலான உடை அணிந்திருந்தாலும் அடிடாஸ் ஷூ அணிந்தால் போதும் அந்த தோற்றத்தை உயர்த்திக் காட்டலாம் என்ற அளவிற்கு அடிடாஸ் ஃபேஷனிஸ்டாக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

ஸ்டைல் , ஃபேஷன் மட்டுமன்றி விளையாட்டு, உடற்பயிற்சி என அனைத்து வகையான இடங்களுக்கு ஏற்பவும் , ஆடைகளுக்கு ஏற்பவும் அணிந்துகொள்ளலாம். 

இப்படி மிடில் கிளாஸ் தொடங்கி ஹை கிளாஸ் வரை அடிடாஸ் சிறந்த பிராண்டாக உருவாகி இன்றோடு 50 வருடங்கள் ஆகிறது. அதை சிறப்பிக்கும் விதமான 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஸ்னீக்கர் - ஐ பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ’அடிடாஸ் சூப்பர்ஸ்டார்’ என்று பெயர் வைத்துள்ளது. 

பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்னீக்கரில் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஸ்ட்ரிப்புகள் பதிக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்ட்ரிப்புகள் தங்கத்தால் பதிக்கப்பட்டுள்ளது

அதேபோல் பின்புற ஹீல் பகுதிக்கு மேல் வரும் பேட்ஜிலும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. அதில் ஷூட்டிங் ஸ்டார் லோகோவும் பதியப்பட்டுள்ளது. சுற்றிலும் தங்க நிற கிளிட்டர்ஸ் வைத்து கவனம் ஈர்க்கச் செய்துள்ளது. 

இந்த ஸ்னீக்கர்ஸ் வெள்ளிக்கிழமையிலிருந்து தங்களுடைய அடிடாஸ் இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்த ஷூவின் விலை 15,000 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிகிறது




பெண்களுக்கான 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட அடிடாஸ் ஷூ அறிமுகம்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு