12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

மூட்டு எலும்ப விலகியதை கைகளால் தட்டிச் சரிசெய்த வீராங்கனை

கால்பந்து போட்டியில் தலைகுப்புற கீழே விழுந்தபோது, விலகிய மூட்டு எலும்பை தானே சரிசெய்த வீராங்கனையின் வீடியோ சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

கால்பந்து விளையாட்டில் சாதிக்க போராடும் வீராங்கனை எத்தனை சவால்களை எதிர்கொள்கிறார் என்பதைப் போன்ற காட்சிகள் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அப்படி கால்பந்து விளையாட்டில் முழு மூச்சுடன் விளையாடிய கேப்டன், மைதானத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தில் இருந்து மீண்டு விளையாடியுள்ளார்.

ஸ்காட்டிஷ் மற்றும் இன்வெர்னஸ் கலிடோனியன் (inverness caledonian thistle) ஆகிய அணிகளுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. கலிடோனியன் அணியை விட ஸ்காட்டிஷ் அணி 6-0 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தது.

இதனால் ஸ்காட்டிஷ் அணியினர் கோல் அடிக்கும் முனைப்புடன் தீவிரமாக விளையாடினர். ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்காட்டிஷ் அணியின் கேப்டன் Jane O’Toole பந்தை அடிக்க முயன்றபோது எதிரணி வீராங்கனையின் மீது அசுரவேகத்தில் மோதி தலைகுப்புற கீழே விழுந்தார்.

டென்னிஸ் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்தது... ஓய்வை அறிவித்த மரிய ஷரபோவா..!மோதிய வேகத்தில் கீழே விழுந்த வீராங்கனையின் கால் மூட்டு எலும்பு விலகியது. ஆனால், யாரையும் உதவிக்கு அழைக்காத அவர், சிறிதும் யோசிக்காமல் வலியை தாங்கிக்கொண்டு தானே கையால் சுத்தியலைக் கொண்டு அடிப்பதுபோல் அடித்து நேர்படுத்தினார்.

அதன் பிறகும் கேப்டன் ஜேன் மீண்டும் எழுந்து ஆட்டத்தில் கலந்துக் கொண்டார். இதைப் பார்த்த சக வீராங்கனைகள் ஆச்சரியத்தில் உறைந்த நிலையில், ஜேன் தனது காலை சரி செய்த வீடியோவை செயின்ட் மிர்ரன் பெண்கள் கால்பந்து அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. எத்தனை வலிகள் வந்தாலும் தடைகளைத் தாண்டி விளையாடி நம்பிக்கையுடன் மிளிர்கிறார் கேப்டன் ஜேன்.




மூட்டு எலும்ப விலகியதை கைகளால் தட்டிச் சரிசெய்த வீராங்கனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு