09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸை தடுக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-அதிபர் கிம் ஜாங் உன்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800-ஐ தாண்டியதுடன் மேலும் சுமார் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா பரவுவதை தடுக்க ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் வடகொரியா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மேலும் பல சர்வதேச விமானங்கள் மற்றும் ரயில்கள் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கொரோனா வைரஸ் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மக்களை பாதுகாப்பதற்கான மிக முக்கிய நடவடிக்கை என்றும், அதில் அதிகபட்ச கவனம் தேவை என்றும் அதிகாரிகளுக்கு, கிம் ஜான் உன் அறிவுறுத்தியதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இத்தனை கட்டுப்பாடுகளை மீறி, கொரோனா நாட்டிற்குள் நுழைந்தால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அதிபர் அதிகாரிகளை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் வடகொரியாவில் இரண்டு மூத்த அதிகாரிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் தங்கள் நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க, கொரோனா பாதித்த ஒருவரை, ஈவிரக்கமின்றி அந்நாட்டு அதிகாரிகள் சுட்டுக்கொன்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




கொரோனா வைரஸை தடுக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-அதிபர் கிம் ஜாங் உன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு