20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடு

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக புதிய தொழில்நுட்ப நிலையான குறைந்த செலவு (ஒரு வீட்டிற்கான செலவு இலங்கை ரூபாவில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வீதம்) 28,000 கொங்கிரீட் பெனல் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் இதன் முதற்கட்டத்தில் 7000 வீடுகளை ஓடுகளுடனான வீடுகளாக அமைப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், எதிர்பார்த்த வகையில் திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாமையின் காரணமாக ஆரம்பத்தில் 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கி ஊடாக காலத்திற்கேற்ற கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்காக திறைசேரியினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த கடன் தொகையை பயன்படுத்தி 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தகாரரான YAPKA Development (Pvt.) Ltd. என்பவருடன் வர்த்தக ஒப்பந்தமொன்று தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், 2020 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சமூக ஊக்குவிப்பு தோட்ட அடிப்படை வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.




யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு