10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்

ஜியோ, பிஎஸ்என்எல் எண்களுக்கு அழைத்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்ஜியோ, பிஎஸ்என்எல் எண்களுக்கு அழைத்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்செல்போன்கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில், பிஎஸ்என்எல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் காலர் ட்யூனை மாற்றியுள்ளன.ஜியோ, பிஎஸ்என்எல் செல்பேசி எண்களை அழைக்கும்போது, அதில் பதிவு செய்யப்பட்ட குரலில் விழிப்புணர்வு செய்தி ஒலிக்கப்படுகிறது.

இருமலுடன் தொடங்கும் அந்த குரல் பதிவில், இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை மறைக்க வேண்டும் என்றும், கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

முகத்தையோ, கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது என்றும், தேவைப்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்படுகிறது. மேலும், உதவிக்கு தொலைபேசி எண்ணும் சொல்லப்படுகிரது.

இந்த குரல் பதிவானது, எதிர் முனையில் அழைப்பை எடுக்கும் வரை ஒலிக்கப்படுகிறது.

மத்திய அரசு கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அழைப்புகளின் போது, அறிவுறுத்தல்களை வழங்கும் இந்த முயற்சி பலராலும் வரவேற்கப்படுகிறது.




கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு